போதையில் உயிருடன் இருந்த கோழியை உணவாக உட்கொண்ட இளைஞர்: அதிர்ச்சி காணொளி!

Report Print Vijay Amburore in இந்தியா

தெலுங்கானாவில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் உயிருடன் இருக்கும் கோழியை உணவாக கடித்து தின்ற வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் Mahabubabad மாவட்டத்தில் மது அருந்திய இரண்டு இளைஞர்கள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த பொழுது, அதிகமான போதையின் காரணமாக சாலையோரம் படுத்து உறங்கி கொண்டிருந்துள்ளனர்.

அதில் சிறிது போதை தெளிந்து எழுந்த ஒரு இளைஞன் திடீரென அங்கு சென்று கொண்டிருந்த உயிர்க்கோழியை பிடித்து கடித்து உண்ண ஆரம்பித்துள்ளார்.

வீடியோவை காண...

இதனை பார்த்து உள்ளுர்வாசி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து, இதுகுறித்து பொலிஸார், மிருகவதை சட்டம் மற்றும் பொது இடத்தில் ஒழுங்கமற்ற நடத்தை போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

தற்போது வீடியோவில் இருக்கும் இளைஞரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கான வேலைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்