இரண்டு முறை கருக்கலைப்பு....அவளை நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன்: காதலனின் அதிர்ச்சி முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் நர்ஸிங் மாணவியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சிலம்பரசனுக்கும், நர்ஸிங் படித்து வந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் ஆரம்பத்தில் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.

இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சிலம்பரசன் மீது ரம்யா பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் விசாரணையில் தெரியவந்ததாவது, சிலம்பரசனும் நர்சிங் மாணவியும் நெருங்கிப் பழகியுள்ளனர். அதில் நர்சிங் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்தத் தகவலை சிலம்பரசனிடம் தெரிவித்ததும், கருவை கலைக்கும்படி அவர் கூறியுள்ளார். அதன்படி நர்சிங் மாணவியும் செய்துள்ளார். மீண்டும் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார்.

அப்போதும் கருக்கலைப்பு நடந்துள்ளது. மூன்றாவது முறையாகவும் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், இந்தமுறை அவர் கருவைக் கலைக்காமல், திருமணம் செய்துகொள்ளுமாறு சிலம்பரசனை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், சிலம்பரசன் அதற்கு மறுத்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருந்தார். இதனை அறிந்து ரம்யா பொலிசில் புகார் அளித்துள்ளார்.

திகார் ஜெயிலில்கூட போடுங்கள், அவளை மட்டும் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்' என்று சிலம்பரசன் கூறிவிட்டதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers