கணவனின் கள்ளக்காதல் வெளிச்சத்திற்கு வந்ததால் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு!

Report Print Santhan in இந்தியா

கணவரின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததால், விரக்தியடைந்த மனைவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிப்பு பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ்(32). குற்றப்பிரிவு காவலராக வேலை புரிந்து வரும் இவருக்கு சுமதி(30) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சார்லசிற்கு பேஸ்புக் மூலம், ஜோதி(33) என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது.

இவர்களின் இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சென்னையில் வீடு ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது.

அதை சார்லஸ் வாங்குவதற்கு முயன்றுள்ளார். ஆனால் அவரிடம் பணம் குறைவாக இருந்ததால், சார்லஸ், ஜோதியிடம் 7.5 லட்சம் வாங்கி, வீட்டை வாங்கியுள்ளார்.

அதன் பின் திடீரென்று ஜோதி மற்றும் சார்லசிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜோதி வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் சார்லஸ் தன்னிடம் 7.5 லட்சம் பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது, ஜோதியின் தம்பி சந்தோஷ் (30) பெயருக்கு வங்கி கணக்கில் மாதந்தோறும் பணத்தை கொடுத்ததாகவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

இதனால் இருவரையும் பொலிசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் சார்லஸ், ஜோதியின் வீட்டிற்கு சென்று ஆவணங்களை கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன் சார்லசின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் சார்லஸ் இல்லாததால், அங்கிருந்த அவரது மனைவி சுமதியிடம் உன்னுடைய கணவர் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும், பத்திரிகையில் செய்தி வெளியிட்டு அவமானப்படுத்துவதாகவும் மிரட்டிச் சென்றுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சுமதி வடசென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில், ஜோதி மிரட்டியது குறித்து புகார் அளித்ததால், பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தமிழ் வார இதழில் சார்லஸ் மற்றும் ஜோதி பற்றி செய்தி வெளியானதால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுமதி நேற்று அதிகளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைக் கண்ட அவரது குழந்தைகள் கதறி அழுததால், அதைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுமதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சுமதி தற்கொலைக்கு முயன்றதையடுத்து சார்லஸ், ஜோதி, அவரது தம்பி சந்தோஷ் ஆகியோரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers