3 மனைவிகள்....சொகுசு வாழக்கை: சென்னையை அதிரவைத்த பிரபல ரவுடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் கைது செய்யப்பட்ட ரவுடி குறித்து பொலிசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.

பிரபல ரவுடியாக வலம் வந்த அப்புவின் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 5 வழக்குகள் உள்ளன. பொலிசார் விசாரணையில் தெரியவந்ததாவது, பிரபல ரவுடியான அப்பு என்கிற தினேஷ் டீமுக்கும் பெரம்பூரைச் சேர்ந்த கதிர் என்ற கதிரவன் கும்பலுக்கும் நீண்ட நாள்களாக மோதல் இருந்துவருகிறது.

இந்த இரண்டு டீம்களிலும் பழிக்குப்பழியாக கொலை நடந்துவருகிறது. செம்பியம் பகுதியில் அப்புவை சின்னதம்பி என்பவர் அரிவாளால் வெட்டினார். அதற்குப் பழிக்கு பழிவாங்க சின்னதம்பியை கடந்த 2010-ல் அப்பு கொலை செய்தார்.

அப்பு, கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டுவந்தார். அப்புவுக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். அதில் ஒருவர் கேபிள் டிவி நடத்திவருகிறார். ரவுடி தொழில் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் அப்பு. இவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

இப்படி, சென்னையில் ரவுடியாக வலம் வந்த அப்புவை பிடிக்க பொலிசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர். அப்புவை கைது செய்தபோது அவரிடம் 1 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்பு கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers