கருணாநிதியை பார்க்க முடியாததால் வேதனையடைந்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட நபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவரை பார்ப்பதற்காக தி.மு.க பிரமுகர் குமரன் காத்திருந்துள்ளார்.

ஆனால், கருணாநிதியை பார்க்க முடியாத காரணத்தால் குமரன் வேதனை அடைந்துள்ளார்.

இந்தநிலையில், குமரன், கையில் தி.மு.க கொடியைப் பிடித்துக்கொண்டு பெட்ரோல் ஊற்றி இன்று தீக்குளித்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால், அவரை மீட்ட பொதுமக்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி குமரன் இறந்தார். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers