மாணவிகளை ஏன் விடுதி உரிமையாளரிடம் உல்லாசமாக இருக்க சொன்னேன்! வார்டன் புனிதா பரபரப்பு வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

பொருளாதாரா சிக்கல் காரணமாகவே மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்தேன் என்று விடுதி காப்பாளர் புனிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோயமுத்தூர் மாவட்டம் சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன்(48). இவர் அங்கு தர்‌ஷனா என்ற பெயரில் பெண்களுக்கான விடுதி நடத்தி வந்தார்.

இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், ஐ.டி. மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் என 180 பேர் தங்கி சென்று வருவர்.

இதே விடுதியில் தண்ணீர்பந்தல் ரோட்டை சேர்ந்த புனிதா(32) என்பவர் வார்டனாக இருக்கிறார்.

இவர் இங்கு தங்கி இருந்த கல்லூரி மாணவிகளை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்ததுடன், அவர்களை ஜெகநாதன் மற்றும் சிலரிடம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி அவர்களை தவறான பாதைக்கு அழைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் நடந்த சம்பவம் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதைக் கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து ஜெகநாதன் மற்றும் புனிதா தலைமறைவானதால், இவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சின தினங்களுக்கு முன்னர் ஜெகன்நாதன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள கிணற்றில் சடலாமாக மீட்கப்பட்டார்.

இதனால் பொலிசார் புனிதாவை தேடி வந்தனர்.

பெங்களூரு, மூணாறு ஆகிய பகுதிகளில் தனது காதலனுடன் சுற்றிய புனிதா, அடிக்கடி இடத்தை மாற்றி வருவதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை பொலிசார் பெங்களூரு, மூணாறு விரைந்து அங்கு முகாமிட்டு, செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது குறித்து தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 1-ஆம் திகதி புனிதா கோயமுத்தூர் நீதிமன்றம் மாஜிஸ்திரேட்டு கண்ணன் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை வருகிற 14–ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார்

அப்போது பொலிசார் 2 நாட்கள் புனிதாவை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். நீதிபதியும் அனுமதி வழங்கினார். இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், இத்தனை நாட்கள் நான் சென்னையில் இருந்தேன்.

நான் பொருளாதார சிக்கலில் இருந்த போது, ஜெகநாதன் மாணவிகளை மூளை சலைவை செய்து பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்தால் உனக்கு பணம் தருகிறேன் என்று கூறினார்.

இதன் காரணமாகவே நான் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு செல்ல கட்டாயப்படுத்தினேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்