கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்த இந்தியா! கோஹ்லி படையை வீழ்த்திய பின்பு ஜோ ரூட் என்ன சொல்கிறார்?

Report Print Santhan in இந்தியா

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடே காரணம் என்று இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் கூறியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 194 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அணியின் வெற்றிக்கு இன்னும் 84 ஓட்டங்கள் மட்டுமே தேவை, களத்தில் கோஹ்லி மற்றும் தினேஷ் கார்த்திக் இருந்ததால், இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.

ஆனால் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி 162 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதனால் இந்திய அணி கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக, இந்திய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்நிலையில் வெற்றிக்கு பின் பேசிய இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட், இந்த வெற்றி இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற ஒவ்வொரு வீரர்களின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி, இந்த வெற்றிக்கு அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் காரணம்.

சொல்லப்போனால் இந்த டெஸ்ட் போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளை பொறுத்தரவரை இது தான் சிறப்பு யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லவே முடியாது.

எப்போது வேண்டும் என்றாலும் முடிவு மாறலாம், இந்திய அணியின் தலைவரான கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், எங்கள் பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு மூலமே இந்த வெற்றி எங்களுக்கு சாத்தியமானது, அடுத்தடுத்த போட்டிகளிலும் இதே போன்று வெற்றி பெற முயற்சிப்போம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers