தினமும் இரவு நேரத்தில்... காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 24 சிறுமிகள் கண்ணீர்

Report Print Vijay Amburore in இந்தியா

பீகாரை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் தியோரா மாவட்டத்தில் செயல்பட்டும் பெண்கள் காப்பகத்திலிருந்து தப்பி வந்த 10 வயது சிறுமி ஒருவர், காப்பகத்தில் கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் தீவிரமான சோதனை மேற்கொண்டு 24 சிறுமிகளை அங்கிருந்து மீட்டு சென்றனர். பின்னர் நிர்வாகத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 18 பெண்கள் மாயமாகியுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து காப்பகத்தை நடத்தி வந்த மோகன் திரிபாதி மற்றும் கிரிஜா திரிபாதி ஆகியோரை கைது செய்து பொலிஸார் காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் காப்பகம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தினமும் இரவு நேரம் ஆகிவிட்டால் காரில் சிறுமிகளை ஏற்றி செல்வதாகவும் பின்னர் காலையில் அவர்கள் காப்பகத்தில் விட்டுவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் காப்பகத்திற்கு சீல் வைத்ததோடு, சிறுமிகள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்துள்ளனர்.

முன்னதாக காப்பகம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு காப்பகத்திற்கு வழங்கப்பட்டு வந்த அரசு நிதியுதவி நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers