கருணாநிதி என்னை அவமானப்படுத்தினாரா? ரகசியத்தை கூற மறுக்கும் நடிகை குஷ்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆரம்பத்தில் திமுக கட்சியில் இணைந்திருந்த குஷ்பு, நான்கு வருடங்களுக்கு பிறகு அக்கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் அங்கிருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இவர் அக்கட்சியில் அவமானப்படுத்தப்பட்டு, கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், திமுகவில் இருந்து நீக்கப்பட என்ன காரணம் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள குஷ்பு, "திமுக-விலிருந்து நான் வெளியேறி நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.

நான் எதற்காக அந்த கட்சியை விட்டு வெளியேறினேன் என்பது தலைவர் கருணாநிதிக்கு நான்றாக தெரியும். மேலும் கலைஞர், ஸ்டாலின் என்று யார்மீதும் எனக்கு எந்த கோபமும் இல்லை. என்னுடைய அரசியல் பயணத்தை திமுக -விலிருந்து தான் ஆரம்பித்தேன்.

நான் ஏன் திமுக-வை விட்டு வெளியேறினேன் ' என்ற சிதம்பர ரகசியத்தை தெரிந்து கொண்டு மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்? இந்த செய்தியால், மக்களுக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது? என தெரிவித்தார்.

உடல் நலம் குன்றியதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கருணாநிதி பற்றி கூறுகையில், அப்பாவைப் பல தடவை நேரில் போய்ப் பார்த்துவிட்டேன். செல்வி அக்கா, தமிழரசு அண்ணன் ஆகியோர் இருந்தார்கள். அவரால் பேச முடியவில்லை. ஆனாலும் நாம் பேசுவதை நன்றாகக் கேட்கிறார் என்று குஷ்பு கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers