கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியானதில் இருந்து இந்திய அளவில் அவரது கருணாநிதி ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
கருணாநிதி மருத்துவமனையில் அனுமதித்து இன்றோடு 11 நாள் ஆகிவிட்டது.
இதில் நேற்று அவரது நிலைமை கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
கருணாநிதியின் உடல்நலம் குறித்த செய்திகளே நேற்று மதியம் முதல் அனைத்து தொலைக்காட்சி, ட்விட்டர், சமூகவலைதளங்களில் முன்னணியில் இருந்து வருகின்றன. அதனால் இன்றைய பிரதான சமூக வலைதளமான ட்விட்டரிலும் கருணாநிதி (#Karunanidhi) ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.