கருணாநிதியின் உடல்நிலை: நேற்றிரவு பொலிசார் குவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக அறிக்கை வெளியானதையடுத்து நேற்று பொலிசார் மருத்துவமனை உட்பட சென்னையின் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டனர்.

மேலும், சென்னை பொலிஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில், போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புக் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் எதற்காக ஆலோசனை கூட்டம் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து வெளியாகியுள்ளது.

காவேரி மருத்துவமனைக்கு வரும் வி.ஐ.பிகளின் பாதுகாப்பு கருதியே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி வரவிருப்பதாக தகவல் வந்ததால், உரிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாம்.

இதுபோன்ற அவசரமான காலகட்டங்களில் பந்தோபஸ்து பணிக்கு அதிகளவு பொலிசார், பணியில் இருக்க வேண்டும் என்பதால், பொலிஸார் விடுப்பு எடுக்காமல் இருக்கவும், விடுப்பில் இருப்பவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பவும் அந்தந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்படுவதும் வழக்கமான ஒரு நிகழ்வுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்