குழந்தையோடு ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்: வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் கைக்குழந்தையோடு பெண் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவின் Bhayander ரயில் நிலையத்திலே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் இறந்த பெண் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

பயணிகள் ரயில் ஒன்று குறித்த ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தது.

அப்போது அதன் அருகே குழந்தையோடு நின்று கொண்டிருந்த பெண், திடீரென்று ரயில் புறப்பட்டவுடன் ரயிலின் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது, இச்சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோவை காண

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்