பல ஆண்டுகளாக கருணாநிதியை சுற்றும் மர்மங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திராவிட இயக்கத்தில் இணைந்து பகுத்தறிவுவாதியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு பிடித்த நிறமே கறுப்புதான்.

வெள்ளை நிற ஆடைகள் அணிந்தாலும் கறுப்பு துண்டு கழுத்தில் அணிந்திருப்பார். கறுப்பு துண்டு மஞ்சளானது,

1996ம் ஆண்டில் இருந்து கருணாநிதி மஞ்சள் துண்டை மட்டுமே அணிந்து வருகிறார். எத்தனையோ விமர்சனங்கள் வந்தும் துண்டு கலர் மாறவே இல்லை.

ஜோதிடர் அறிவுரைப்படி, குருவுக்கு உகந்தது என்பதால், அவர் மஞ்சள் துண்டு அணிவதாக கூறப்படுகிறது.

கருணாநிதி தனது கையில் எப்போதும் கட்டியிருக்கும் கடிகாரத்தில் கறுப்பு நிற பட்டைதான் இருக்கும். ஆனால், 2015 ஆம் ஆண்டில் இருந்து சிவப்பு நிற பட்டையுடன் கூட கடிகாரத்தை அணியத் தொடங்கினார்.

கருணாநிதி இந்த கடிகாரத்தை, சிறப்பு பூஜை செய்து அணிந்துள்ளார். எதிரிகள் அழியவும், அவர் மீண்டும் முதல்வராகவும், நீண்ட ஆயுளுக்காகவும், சிவப்பு நிற பட்டையுடன் கூடிய கைக்கடிகாரத்தை அணிந்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவரால் முதல்வர் பதவியில் அமரமுடியவில்லை.

எந்த நம்பிக்கைக்காகவும் மஞ்சள் துண்டை அணியவில்லை; ஒரு அடையாளத்துக்காகத் தான் அணிகிறேன் என கருணாநிதி விளக்கம் அளித்தார்.

கருணாநிதி ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்ததால், குருபலம் பெற அவர் மஞ்சள் துண்டு அணிந்தார் என ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்