அமாவாசை முடியும் வரை கருணாநிதியின் உடல்நிலையில் எச்சரிக்கை: கலக்கத்தில் உறவுகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கருணாநிதி மீண்டும் நலம் பெற வேண்டும் என தொண்டர்களும் குடும்ப உறுப்பினர்களும் பிரார்த்தனை செய்கின்றனர்.

இவ்வளவு நாள் இயற்கையாகத்தான் சுவாசித்துக் கொண்டிருந்தார். கடந்த ஓரிரு நாள்களாக செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியும் என கூறப்பட்டுள்ளது. ஒரு வாரகால இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் பின்னடைவு என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டு மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர் தொண்டர்கள்.

' எழுந்து வா தலைவா...அறிவாலயம் போகலாம்' என்ற குரல்கள் அதிர வைத்துக் கொண்டிருந்தன.

இந்நிலையில், ஆடி அமாவாசை தாண்டினால்தான் நிலைமை சீராகும். அமாவாசை முடியும் வரையில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுவரையில் ஏற்ற இறக்கமான சூழலைத் தவிர்க்க முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்