இன்று கருணாநிதி பற்றி உறுதியான தகவல் வெளியாகுமா? அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க கோரிக்கை

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக கூறப்படும், நிலையில் ஸ்டாலின் தி.மு.க நிர்வாகிகளுடன் திடீரென்று ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்துள்ளது. சந்திப்பின் போது உடன் முரசொலி செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் முதல்வரை நேரில் சந்தித்த குடும்பத்தினர், 5 முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு உரிய கவுரவம் வழங்கவேண்டும் எனவும் மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் பழனிசாமி கருணாநிதி குடும்பத்தாரிடம் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்