கலைஞர் கருணாநிதியின் இறுதி மரியாதை எப்போது? வெளியான முழுத்தகவல்

Report Print Santhan in இந்தியா
382Shares

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இரவு 8.30 மணி முதல் 1 மணி வரை கோபாலபுர இல்லத்தில் இறுதி மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவி காலமானார்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல் இன்று இரவில் சிஐடி காலனியில் உள்ள இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கருணாநிதியின் உடலுக்கு இன்று இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கோபாலபுர இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தலாம் எனவும், அதன் பின் சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரையும் குடும்பத்தினர், உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புக்களுக்கும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்