தமிழக அரசுக்கு வைரமுத்துவின் வேண்டுகோள்

Report Print Fathima Fathima in இந்தியா
176Shares

சட்டத்தை பார்க்காதீர்கள், அவர் சரித்திரத்தை பாருங்கள் என தமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது உடலை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து டுவிட்டரில், கலைஞருக்கு கடற்கரையில் இடம் கொடுங்கள். சட்டத்தைப் பார்க்காதீர்கள்; அவர் சரித்திரத்தைப் பாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்