ஜெயலலிதா இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்: சசிகலா உறவினர் கிருஷ்ணப்ரியா பரபரப்பு டுவீட்

Report Print Arbin Arbin in இந்தியா

ஜெயலலிதா இருந்திருந்தால் கருணாநிதிக்கு மெரினாவில் நிச்சயம் இடம் ஒதுக்கியிருப்பார் என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.

கருணாநிதி உடல்நல குறைபாடுகளால் இன்று மறைந்தார். அவரது உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் அண்ணாவின் நினைவிடத்துக்கு பக்கத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுகவினர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தது.

இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மாறாக சட்ட ரீதியான காரணங்களை தெரிவித்தது. இதையடுத்து திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளது. தமிழக அரசின் செயலை அனைத்து கட்சியினரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா டுவிட்டரில் இரு பதிவுகளை இட்டுள்ளார்.

அதில் அம்மா உயிருடன் இருந்திருந்தால், கண்டிப்பாக , திரு கலைஞர் அவர்களுக்கு அறிஞர் அண்ணாவிற்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம்.

அம்மாவை அரசியல்வாதியாக மட்டுமே, தள்ளி நின்று பார்த்தோர்க்கு இது தெரியவும் வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்