பெரியார் மறைந்த போது.. கருணாநிதி எடுத்த அதிரடி முடிவு

Report Print Fathima Fathima in இந்தியா

மறைந்த கலைஞர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கூறிவிட்டது.

இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் 1973ம் ஆண்டு பெரியார் மறைந்த போது, அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, அரசு மரியாதை செய்ய ஏற்பாடுகளை செய்யச் சொன்னார்.

அச்சமயத்தில் தலைமை செயலாளராக இருந்த சபாநாயகம், பெரியார் எந்த அரசு பதவியும் வகிக்காததால் சட்டத்தில் இடமில்லை என்றார்.

உடனே கோபம் கொண்ட கருணாநிதி, மகாத்மா காந்தி மரணமடைந்த போது அரசு மரியாதை வழங்கப்பட்டதே.. அவர் எந்த பதவியில் இருந்தார் என கேட்டார்.

இதற்கு சபாநாயகம், Father of Our Nation என பதிலளிக்க, பெரியார் Father of Tamilnadu என கருணாநிதி கூறினாராம்.

இதனால் பிரச்சனைகள் எழும் என சபாநாயகம் கூறிய போது, திமுக அரசு கலைக்கப்பட்டாலும் மகிழ்ச்சியே என்றாராம்.

இதனை தொடர்ந்து ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட பெரியாரின் உடலுக்கு மும்முறை குண்டு முழங்கி முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்