பெரும் சோகத்துடன் கருணாநிதி உடல் அருகே மகள் செல்வி: உறவினர்கள், பிரபலங்கள் அஞ்சலி

Report Print Arbin Arbin in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தற்போது கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கோபாலபுரம் இல்லத்திற்கு தொண்டர்கள் புடை சூழ வந்து சேர்ந்த கருணாநிதியின் உடல் தற்போது இறுதிச் சடங்குகளுக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர் தவிர்த்து உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கியத் தலைவர்கள், பிரமுகர்கள் என அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பேராசிரியர் அன்பழகன் அஞ்சலி செலுத்தினார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் அஞ்சலி செலுத்தினார்.

அதேபோல கருணாநிதி உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மு.க.ஸ்டாலின், மகள் செல்வி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் குடும்பத்தினர் கருணாநிதி உடல் அருகே உள்ளனர்.

மகள் செல்வி தாங்க முடியாத துயரத்துடன் அழுதபடி தனது தந்தையின் உடல் அருகே அமர்ந்துள்ளார்.

கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது மகன் அருண் விஜய் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். பேராயர் எஸ்ரா சற்குணம் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்