கருணாநிதிக்கு அஞ்சலி: ராஜாஜி ஹாலுக்கு வருகிறார் பிரதமர் மோடி, ராகுல்காந்தி

Report Print Arbin Arbin in இந்தியா

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காலை 6.30 மணிக்கு ராஜாஜி அரங்கத்துக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கருணாநிதி உடல்நல குறைவுகளால் நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 95.

காவேரி மருத்துவமனையிலிருந்து அவரது உடல் கோபாலபுரம் இல்லத்துக்கும் இதைத் தொடர்ந்து அவரது உடல் சிஐடி காலனியில் உள்ள இல்லத்துக்கு சென்றது.

அங்கும் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது உடல் சிஐடி காலனியிலிருந்து ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இங்கு காலை 6.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்துகிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதுபோல் இன்று பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்