கருணாநிதி மரணம்! கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட விஜயகாந்த்

Report Print Santhan in இந்தியா
121Shares

திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததையடுத்து தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலைஞர் கருணாநிதி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து நேற்று இரவு இவரது உடல் கோபாலபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் பின் தற்போது ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் கலைஞர் கருணாநிதி மரண செய்தியை கேட்டு கண்ணீர்மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக தலைவர் கருணாநிதி மறைந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை, என்னுடைய எண்ணங்களும், நினைவுகளும் கருணாநிதியுடனேயே இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்