கருணாநிதியிடம் திருடிய பேனா: உணர்ச்சிவசப்பட்ட சிம்பு

Report Print Arbin Arbin in இந்தியா
284Shares
284Shares
lankasrimarket.com

தான் சிறு வயதாக இருக்கும் போது கலைஞர் கருணாநிதியின் பேனாவை திருடிவிட்டு பின்னர் திருப்பிக் கொடுத்தேன் என சிம்பு தன் சிறு வயது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நான் 3 அல்லது 4 வயது இருக்கும் போது, என் பிறந்த நாளான பிப்ரவரி 3ம் திகதி எங்கள் வீட்டிற்கு தலைவர் கருணாநிதி அவர்கள் வந்திருந்தார்.

நான் சிறுவன் என்பதால், அவரின் மடியில் அமர்ந்திருந்தேன். அப்போது அவருக்கு தெரியாமல் அவரின் சட்டைப் பையில் இருந்த பேனாவை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தேன்.

அவர் என் குடும்பத்தினருடன் பேசி விட்டு, கிளம்பும் போது, அவரின் சட்டைப்பையில் பேனா இல்லாதது பார்த்து கேட்டார்.

அப்போது அதை வைத்து நான் விளையாடிக் கொண்டிருந்தேன். உடனே என் தந்தை அதை அவரிடம் கொடுக்க முற்பட்டார்.

இருக்கட்டும் பையனிடமே இருக்கட்டும் என்றார். ஆனால் என் தந்தை இல்லை வாங்கி கொள்ளுங்கள் என்றார். அப்போது நானே அந்த பேனாவை அவரின் சட்டையில் வைத்த ஞாபகம் உள்ளது.

என் வீட்டிற்கு என் பிறந்த நாளுக்கு அவர் வந்தார், அவர் மடியில் அமர்ந்திருந்தேன் என்று நினைக்கும் போது அதுவே மிகப்பெரிய பரிசாக கருதுகிறேன் என சிம்பு கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்