திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு மு.க ஸ்டாலின் அஞ்சலி

Report Print Raju Raju in இந்தியா

மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் மெரினாவில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கருணாநிதியின் மகனும், திமுக செயல் தலைவருமான மு.க ஸ்டாலின் சற்றுமுன்னர் கருணாநிதி நினைவிடத்துக்கு வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

ஸ்டாலினுடன் ஆ.ராசா, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணயின் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் கருணாநிதி நினைவிடத்தில் பிரம்மாண்ட புகைப்படமும் இன்று வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்