கருணாநிதியின் சொத்துக்கள் இனி யாருக்கு? உயில் எழுதிவைத்துள்ளாரா?

Report Print Deepthi Deepthi in இந்தியா
779Shares
779Shares
ibctamil.com

திமுக தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ.62 கோடி 99 லட்சம் ஆகும்.

அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடும்போது அவர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவில் அவர்களுடைய சொத்து மதிப்பு விவரத்தை குறிப்பிட வேண்டும்.

அந்த வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தான் போட்டியிட்ட திருவாரூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது கருணாநிதி தனது சொத்து விவரம் அடங்கிய பட்டிலைய அளித்தார்.

அதன்படி அவரது சொத்துக்களின் விவரம் இதோ,

கருணாநிதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன் பெயரிலும், தன் மனைவியர் பெயரிலும் மொத்தம் ரூ.62 கோடியே 99 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கையிருப்பு ரொக்கமாக 50 ஆயிரம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 536 ரூபாய். தனது மனைவி தயாளு அம்மாள் பெயரில் ஏழு கோடியே 44 லட்சத்து ஏழாயிரத்து 178 ரூபாய் மதிப்பிலும், ராசாத்தி அம்மாள் பெயரில் 37 கோடியே 90 லட்சத்து 43 ஆயிரத்து 862 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் தனது மனைவியரின் பெயரில் 53 கோடியே 64 லட்சம் ரூபாய் சொத்து உள்ளது. கருணாநிதி பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும், அவரது பெயரில் கார்கள், நிலங்கள், வங்கிக் கடன் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இனி சொத்துக்கள் யாருக்கு? உயில் எழுதிவைத்திருக்கிறாரா?

கருணாநிதி வாழ்ந்து வந்த கோபாலபுரத்து வீடு நூலகமாக மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் தற்போது அந்த வீட்டில் இருப்பதால் அவரின் மறைவுக்கு பிறகு அந்த வீடு நூலகமாக மாற்றப்படவிருக்கிறது.

இதுதவிர, அவரிடம் இருக்கும் இதர சொத்துக்களை தனது பிள்ளைகளில் யாருக்கு என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே தனது பிள்ளைகளுக்கு தேவையானவற்றை செய்துவிட்டார். தனது 3 மனைவியருக்கு பிறந்த 6 பிள்ளைகளுக்கும் தேவையான சொத்துக்களை வாங்கிகொடுத்துவிட்டார்.

தற்போது, இவரது பெயரில் தற்போது இருக்கும் சொத்துக்கள் மனைவி தயாளு அம்மாளுக்கு சொந்தமாகும். அவரே அனைத்து சொத்துக்களையும் பராமரித்து வருவார் என கூறப்படுகிறது. மேலும், அவரது மறைவுக்கு பிறகு சொத்துக்கள் பிள்ளைகளுக்கு சேரும் என்றும் கருணாநிதி உயில் எழுதிவைத்துள்ளாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும், ஜெயலலிதா இறந்தபோது அவருடைய சொத்துக்கள் யாருக்கு என்பது குறித்த பிரச்சனை தற்போது வரை நிலவி வருகிறது. ஆனால், கருணாநிதி விடயத்தில் அவருக்கு குடும்பம் மற்றும் பிள்ளைகள் இருப்பதால் அவரது சொத்து பிரச்சனைகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்