அக்காவை இதனால் தான் கொலை செய்தேன்: தம்பியின் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா
257Shares
257Shares
ibctamil.com

தமிழ்நாட்டில் அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்த தம்பியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் சரணமணி (40). இவருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் வீட்டில் துர்நாற்றம் வீசியதால், பொலிசார் கதவை உடைத்து சோதனையிட்டனர்.

அப்போது கட்டில் அருகே அமர்ந்த நிலையில் சரணமணி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்த நிலையில் சரணமணியின் தம்பி உறவு முறையுள்ள சடையாண்டி (38) தான் அவரை கொலை செய்தார் என தெரியவந்தது.

சடையாண்டியை பொலிசார் கைது செய்த நிலையில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், சரணமணியிடம் அதிக பணப் புழக்கம் இருந்தது.

அதனால் அவரிடம் 1.50 லட்சம் பணத்தை கடனாக வாங்கினேன்.

அந்த பணத்தை அவர் திரும்பி கேட்ட போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் சரணமணி கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து சடையாண்டியிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்