சந்தோஷமா இருக்கலாம் வா! 16 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி: பின்னர் செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா
808Shares
808Shares
lankasrimarket.com

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து ஏமாற்றிய தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குணசேகரன் (22) என்ற தொழிலாளியும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு சிறுமியிடம், நாம் சந்தோஷமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி குணசேகரன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் திருப்பூரில் உள்ள சிறுமியின் சகோதரி வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தார். இதையடுத்து அவர் சிறுமியை அவரது சகோதரி வீட்டில் விட்டு விட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். நீண்ட நாட்கள் ஆகியும் குணசேகரன், அந்த சிறுமியை பார்க்க செல்லவில்லை.

இது குறித்து சிறுமியின் தாய் குணசேகரனிடம் கேட்டபோது உனது மகளுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் குணசேகரனை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது குணசேகரனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்