இறுதிச்சடங்கில் கலங்கிய கண்களுடன் நின்றிருந்த இந்த நபர் யார்? கருணாநிதியுடனான உறவு எப்படி!

Report Print Deepthi Deepthi in இந்தியா
551Shares
551Shares
ibctamil.com

கருணாநிதியின் நிழலாக இருந்தவர் நித்யா எனும் நித்யானந்தன்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே புதைக்கப்பட்டார். அப்போது அவருடைய குடும்பத்தினர் பலரும் இறுதி மரியாதை செலுத்த கடைசியாக வந்து அஞ்சலி செலுத்தியவர் நித்யா.

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் அவருடன் சில ஆண்டுகளாக வசித்து வந்த இவர், அவருக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்துகொடுத்துள்ளார்.

கருணாநிதியை வீட்டில் இருந்து வீல் சேரில் ஏற்றி விழா நடக்கும் இடத்தில் அமர வைப்பது முதல், தனிப்பட்ட உதவிகள் செய்வது வரை எல்லாமே நித்யா தான்.

முதலில் சிறுசிறு வேலைகள் செய்து வந்த நித்யா, பின்னர் கருணாநிதியின் உதவியாளராகப் பணி அமர்த்தப்பட்டார்.

ஒருமுறை கருணாநிதிக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. முதுகில் செய்யப்பட்ட அந்த ஆப்ரேஷன் காரணமாக ஒரு மாதத்துக்கும் மேலாக ஓய்வில் இருந்தார் கருணாநிதி.

அப்போதும், இரவும் பகலுமாக அருகில் இருந்து பார்த்துக்கொண்டது இந்த நித்யாதான். மருத்துவமனையில் நடந்த விஷயங்களை டைரிக் குறிப்புகளாகத் தொடர்ந்து கருணாநிதி வெளியிட்டார்.

அதில் கவனித்துக்கொண்ட நர்ஸ்களின் பெயர்களோடு, 'என் தனி உதவியாளர் நித்யாவும் கடந்த ஒரு மாத காலமாக என்னைவிட்டு அங்கும் இங்கும் அகலாமல் ஆற்றிய பணிகளை இந்தத் தொடரிலே குறிப்பிட்டே ஆக வேண்டும்!’ என்று சொல்லி இருந்தார்.

கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவருக்கு எல்லாமுமாய் இருந்தவர் நித்யா. காலையில் கண்விழித்ததில் தொடங்கி இரவில் கண் மூடும்வரை கருணாநிதியுடனேயே இருப்பதில்தான் நித்யாவின் நாட்கள் கழியும்.

இந்த காரணத்தினாலேயே, கருணாநிதியின் குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தும்போது குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்ட நித்யாவையும் அழைத்து இறுதி அஞ்சலி செலுத்த சொல்லியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்