பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா
196Shares
196Shares
ibctamil.com

ராஜீவ்காந்தி கொலை குற்றத்தில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள், அவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதற்கு பதிலளித்துள்ள உச்சநீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்