யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த விஜயகாந்த்!

Report Print Vijay Amburore in இந்தியா
69Shares
69Shares
ibctamil.com

கருணாநிதி மறைவிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயாகாந்த் வெளியிட்ட வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமையன்று, வயது முதிர்வு மட்டும் உடல்நிலை குறைபாடு காரணமாக உயிரிழந்தார்.

இந்திய அரசியல் தளத்தில் மூத்த தலைவராக இருந்த கலைஞரின் மறைவு அரசியல்வாதிகள் அனைவரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு தலைவர்களும் இறுதி சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அதேசமயம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கண்ணீர் மல்க வீடியோ ஒன்றினை வெளியிட்டு கருணாநிதிக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்தார்.

இந்த வீடியோவானது தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

முன்னதாகி விஜயகாந்தின் திருமணத்தை திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முன்னின்று நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்