உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா
83Shares
83Shares
ibctamil.com

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தமது கழக தொண்டர்களுக்காக உடன்பிறப்பே என விளித்து இதுவரை 7,000கும் மேல் கடிதங்கள் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமது 45-வது வயதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற கருணாநிதி, திமுக தலைவராக மட்டும் 50 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார்.

மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினராக 13 முறை பதவி வகித்துள்ள கருணாநிதி ஒருமுறைக்கூட தேர்தலில் தோற்றதில்லை.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என திரையுலகில் சுமார் 64 ஆண்டு காலம் அவர் பயணித்துள்ளார்.

16 நாவல்கள், 21 நாடகங்கள், ஒரு பயண நூல் மற்றும் 150க்கும் மேற்பட்ட புத்தகங்களை கருணாநிதி எழுதியுள்ளார்.

அவரது கோபாலபுரம் இல்லத்தில் மட்டும் 10,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலும் அன்றாட அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையிலும் உடன்பிறப்பே என விளித்து சுமார் 7,000க்கும் மேற்பட்ட கடிதங்களை கருணாநிதி எழுதியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்