கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலை! என்ன தெரியுமா?

Report Print Santhan in இந்தியா
868Shares
868Shares
ibctamil.com

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது, ராகுல்காந்தி சுமார் அரைமணி நேரம் எந்தவித பாதுகாப்புமின்றி கூட்ட நெரிசலில் சிக்கி தவித்ததால், தற்போது அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.

அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி அஞ்சலி செலுத்த முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியாக செல்ல முயன்றுள்ளார்.

ஆனால் அங்கு பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் ஆகியோரின் கூட்டம் அதிகமாக இருந்ததால், ராகுல்காந்தியால் செல்ல முடியவில்லை எனவும், இதன் காரணமாக எந்த ஒரு பாதுகாப்புமின்றி சுமார் அரைமணி நேரம், ராகுல்காந்தி நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கும் வீடியோக்காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஏனெனில் பிரதமருக்கு இணையான பாதுகாப்பு அளிக்கப்படும், மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில், ராகுல்காந்தி இருக்கிறார்.

ஆனால் அந்த வீடியோவில் அவர் இருக்கும் இடத்தில் இரண்டு காவலர்கள் மட்டுமே உள்ளனர். இது

அதுமட்டுமின்றி, அவருடைய சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் அவருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க முடியாமல் திணறியுள்ளனர்.

மேலும் ராகுல் கூட்டத்தோடு கூட்டமாக நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால், அவருடைய தனி பாதுகாவலர்களே படிக்கட்டு சுவரின் மீது ஏறிச் சென்று கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர்.

அதன் பின்னரே ராகுலுக்கு வழி கிடைக்கத் தொடங்கியது. உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் ராகுல் காந்தி, எந்த பாதுகாப்பும் முன்னேற்பாடும் இன்றி, இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கூட்டத்தோடு கூட்டமாக அழைத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய உளவுத்துறையினர், உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்