அழகிரியின் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அவரது மூத்த மகன் அழகிரி அஞ்சலி செலுத்தினார்,

அதன்பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய இவர், என் தந்தையிடம் என் ஆதங்கத்தை வேண்டிகொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது.

இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்புடையது தான். திமுக செயற்குழு கூட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் தற்போது திமுகவில் இல்லை. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்து திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஸ்டாலின் தலைமையை விரும்பாத அழகிரி கருத்து தெரிவித்த காரணத்தால் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகிரியின் இந்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா இறந்தபோது பன்னீர் செல்வம் தர்மயுத்தத்தை தொடங்கியதுபோது, கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அழகிரி தர்மயுத்தத்தை தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...