14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் 14 வயது சிறுமி ஒருவர், இரண்டு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் நடப்பது அதிகரித்துக் கொண்டு வருகிறது.

பல வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், குற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கின்றன.

உத்தரபிரதேச மாநிலம் மிரான்பூர் பகுதியில், நேற்று காலை கடைக்கு சென்ற 14 வயது சிறுமி ஒருவர் இரண்டு நபர்களால் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டார். அதன் பின்னர், குறித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர்கள், மலையில் விடுவித்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு சென்ற அச்சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸில் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தஜிம், ஃபிரோஸ் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார், இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்