வெட்கத்தை விட்டு முதல்வரிடம் கெஞ்சினேன்: கண்ணீர் மல்க முக ஸ்டாலின் பேச்சு

Report Print Raju Raju in இந்தியா

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம்கேட்டு முதல்வர் பழனிச்சாமியின் கையை பிடித்து கெஞ்சியதாக கண்ணீருடன் தெரிவித்துள்ள முக ஸ்டாலின்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் கருணாநிதியின் சாதனைகள் பட்டியலிடப்பட்டது.

  • பொதுவாழ்வில் ஈடுபடுவோர் பின்பற்றக்கூடிய பல்கலைக்கழகம் திமுக தலைவர் கருணாநிதி
  • கை ரிக்‌ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டம் தந்தவர்
  • கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர முனைப்பு காட்டியவர் கருணாநிதி போன்ற விடயங்கள் வாசிக்கப்பட்டது.
பொதுக்குழுவில் உள்ள நிர்வாகிகள் எல்லோரும் ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள்.

இதில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ மிகவும் கோபமாக பேசினார். அதில, நமக்கு எதிராக செயல்படும் அந்த உறவை நேரடியாக செயல் தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டிக்க வேண்டும். ஸ்டாலின் தலைவராக வரப்போகிறவர் என கூறினார், மு.க அழகிரியை தான் மறைமுகமாக தாக்கி பேசினார் என கூறப்படுகிறது.

கண்ணீருடன் முக ஸ்டாலின் பேச்சு

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய முதல்வர் எடப்பாடியிடம் வெட்கத்தை விட்டு கையை பிடித்து கெஞ்சினேன், அப்போதும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை.

கருணாநிதி இல்லாமல் செயற்குழு நடைபெறுவதை எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை

நீங்கள் தலைவரை மட்டும் இழந்துள்ளீர்கள், நான் தலைவரையும், தந்தையையும் இழந்துள்ளேன்.

மெரினா தீர்ப்பு சாதகமாக வந்திருக்கவில்லை என்றால் கருணாநிதி பக்கத்தில் என்னை புதைக்க வேண்டியிருந்திருக்கும் என உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்