திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன? அவர் செய்த தவறு இதுதான்

Report Print Raju Raju in இந்தியா

திமுகவிலிருந்து முக அழகிரி நீக்கப்பட்டதற்கான காரணம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

கருணாநிதி மறைவுக்கு பிறகு அவர் சமாதிக்கு வந்த முக அழகிரி, முக ஸ்டாலினை கடுமையாக எதிர்த்து பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக அழகிரி கடந்த 2014-ஆம் ஆண்டு திமுக-விலிருந்து நீக்கப்பட்டார்.

இதுகுறித்து திமுக-வின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அப்போது வெளியிட்ட அறிக்கையில், கட்சிக்கு கலகம் ஏற்படுத்த முயன்றதால் அழகிரி தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.

கட்சிப்பொறுப்பில் அழகிரி நீடிப்பது கட்சி கட்டுப்பாட்டை குலைத்துவிடும் என குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து விடுத்த அறிக்கையில், கட்சி தலைமையை இழிவுப்படுத்தும் வகையில் செயல்படுவதால் அழகிரி கட்சியிலிருந்து அறவே நீக்கப்படுவதாக அறிவித்தார்.

மேலும், திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆலோசித்தே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்