மக்களுக்காக ஏழை வியாபாரி செய்த நெகிழ்ச்சியான செயல்: குவியும் பாராட்டு

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னிடம் இருந்த 50 போர்வைகளை தானமாக வழங்கிய ஏழை வியாபாரியின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கேரள மாநிலம் மழை வெள்ளத்தில் சிக்கித் திண்டாடி வரும் நிலையில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு மின்சாரம், உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் திண்டாடிவருகின்றனர்.

நடிகர்களும் பொதுமக்களும் கேரளாவுக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த விஷ்ணு என்ற ஏழை போர்வை வியாபாரி நெகிழ்ச்சி விடயத்தை செய்துள்ளார்.

கேரளாவில் தொழில் செய்து வரும் விஷ்ணு ஹரியானாவில் இருந்து விற்பனைக்கு வாங்கி வந்த 50 போர்வைகளை கேரள மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளார்.

விஷ்ணு கூறுகையில், நான் 16 வயதில் கேரளாவுக்கு வந்தேன். கண்ணூரில் மனைவி குழந்தைகளுடன் வசிக்கிறேன். வெறுங்கையுடன் கேரளாவுக்கு வந்த எனக்கு இங்கே எல்லாம் கிடைத்தது.

என்னை வாழவைத்த மாநிலத்துக்கு என்னால் முடிந்த சிறு உதவி இது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்