35 வயதுக்கு மேல் மணமகள் தேவை! 58 வயதில் பல பெண்களை ஏமாற்றிய நபர்: வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தினசரி நாளிதழ் மூலம் விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றிய 58 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, போரூரை சேர்ந்தவர் முருகன் (58). இவர் மீது ஓசூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தாம்பரம் காவல்நிலையத்தில் முருகன் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவரை தேடி வந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் இஎம்ஐ நம்பரை வைத்து கைது செய்தனர்.

அதன் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் கடந்த பத்து ஆண்டுகளாக இதே போன்று தான் பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது, பிரபல தினசரி நாளிதழில் திருமணத்திற்கு பெண் தேவை. அதுவும் 35 வயதுக்கு மேலான பெண்கள் மட்டும் தேவை என விளம்பரம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனால் திருமண ஆசையில் இருக்கும் பெண்கள் அவரை நேரில் சந்திக்க வரும் போது, தான் ஒரு பணக்காரர் போலவும், தொழில் அதிபர் போலவும் காட்டிக்கொண்டுள்ளார்.

அதன் பின் அந்த பெண்களிடம் ஒன்றாக வசிப்பார். இதைத் தொடர்ந்து திடீரென்று என்றாவது ஒருநாள் தனது உடைமைகளை மற்றும் அந்தப் பெண்ணின் நகை, பணம் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்.

இப்படி பல பெண்களை 10 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 18 சவரன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் சில ஏடிஎம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது முருகனிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்ட நபர் தான் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்