மகளுக்கு விஷம் கொடுத்து அவர் துடி துடித்து சாவதை வேடிக்கை பார்த்த கொடூர தந்தை! சிறுமியின் மரண வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா
588Shares

இந்தியாவில் இரக்கமற்ற தந்தை ஒருவர் தன் 16 வயது மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, அவர் இறக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் சுக்ர்தால் பகுதியில் இருக்கும் சுடுகாட்டின் வெற்றிடப் பகுதியில் இராணுவத்தில் சேர விரும்புபவர்கள் அங்கு வந்து பயிற்சி செய்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று மாலை ஒரு குழுவினர் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, சுடுகாட்டின் அருகே இருந்த இருக்கையில் ஒரு சிறுமி துடித்துக் கொண்டிருப்பதையும், அதை அருகில் இருக்கும் நபர் பார்த்துக் கொண்டிருப்பதையும், அந்த குழுவினர் கண்டுள்ளனர்.

இதனால் அந்த குழுவினர் உடனடியா அந்த சிறுமியை தாங்கள் இருக்கும் பகுதிக்கு வரும் படி சைகை காட்டியுள்ளனர்.

இதையடுத்து ஓடிவந்த சிறுமி அந்த இளைஞர்களிட தனது தந்தை தமக்கு விஷமளித்திருப்பதாகவும், தம்மை காப்பாற்றுமாறும் கெஞ்சியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.

சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் அனைவரும் தீவிரம் காட்டியதால், அங்கிருந்த சிறுமியின் தந்தை தப்பி ஓடியுள்ளார்.

அதன் பின் மருத்துவமனையில் சிறுமியிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், தனது பெயர் தானு எனவும் அவரது தந்தை பெயர் சுந்தர் சிங் எனவும் கூறியுள்ளார் .

மேலும், தனது தந்தையே தமக்கு விஷம் அளித்ததாக கூறியதால், பொலிசார் அதையே அதுவே அவருக்கு மரண வாக்குமூலமாகவும் அமைந்தது.

ஏனெனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தானு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதன் பின்பு பொலிசார் நடத்திய தீவிர சோதனையில், சிறுமி தானுவின் அந்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவியின் மரணத்துக்கு பிறகு, மகள் தானு மீது பலர் புகார் கூறி வந்ததாகவும், தானுவை சரி செய்ய தனது தங்கையின் வீட்டுக்கு அனுப்பினால் அங்கிருப்பவர்களும் அவர் மீது பல்வேறு புகார்கள் கூறியதால் வேறுவழியின்றி மகளை கொலை செய்துவிட முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

இதனால் மகள் இறந்தவுடன், அருகில் இருந்த கங்கை நதியில் அவரது உடலை வீசிவிட திட்டமிட்டு, அவள் இறப்பதற்காக காத்திருந்ததாகவும் அந்த தந்தை கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்