வெள்ளத்தில் சிக்கிய 100 பேரை வேகமாக பாலம் கட்டி காப்பாற்றிய ராணுவம்: திக் திக் நிமிடங்கள்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இருந்த 100 பேரை, மீட்பு படையினர் மர பாலத்தை கட்டி மீட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழை அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.

மேலும் நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மலப்புழா எனும் இடத்தில் வெள்ள நீரில் மாட்டிக்கொண்ட மக்கள் பலர், அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இந்திய ராணுவப்படை தகவல் அறிந்து, அவர்களை மீட்க களம் இறங்கியது. வெள்ளநீருக்கு இடையில் 35 அடிக்கு நீண்ட மர பாலத்தை வேகமாக ராணுப்படை கட்டியது. அதன்மூலம், வெள்ளத்தில் சிக்கி தவித்த சுமார் 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ராணுவத்துடன் அப்பகுதி மக்கள் சிலரும் இணைந்து செயல்பட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்