கேரளாவில் 3 விநாடிகளில் வெடித்து சிதறவிருந்த ஹெலிகொப்டர்: 26 பேரை காப்பாற்றிய கடைசி தருணம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த பொதுமக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் விமானப்படைக்கு சொந்தமான 42பி ஹெலிகாப்டர் ஆபத்தான நிலையில் சிக்கித்தவித்த 26 பேரை மீட்க ஒரு வீட்டு மாடியில் இறங்கி, அனைவரையும் பத்திரமாக மீட்டது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சாலக்குடி நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வீட்டு மாடியில் நின்றிருந்தவர்களின் பெரும்பாலோனர் வயதானவர்கள் என்பவதல் அவர்களால் ஹெலிகொப்டரில் ஏற இயலவில்லை.

இதனால், ஹெலிகாப்டரை தரையிறக்கி 26 பேரையும் ஏற்றினார். ஒரு சில விநாடிகள் அங்கு ஹெலிகாப்டர் நின்று இருந்தால் வெடித்து சிதறி இருக்கும்.

ஆனால் உடனடியாக ஹெலிகொப்டரை வீட்டு மாடியில் இருந்து இயக்கியதால் அத்தனை பேரும் காப்பற்றப்பட்டனர். 8 நிமிடம் அங்கு நிறுத்தி 26 பேரையும் மீட்டோம். இன்னும் 3 விநாடிகள் மட்டும் அங்கு நின்றிருந்தால் ஹெலிகொப்டர் வெடித்து சிதறியிருக்கலாம்.

ஆனால் நான் ஹெலிகொப்டரின் முழு எடையையும் வீட்டின் மேல் நிறுத்தவில்லை. பாதி பறந்த நிலையில்தான் ஹெலிகொப்டர் இருந்தது என பைலட் ராஜ்குமார் கூறியுள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers