ஆசைக்கு இணங்கினா ஜாலியா வாழலாம்: கல்லூரி மாணவியிடம் பாலியல் பேரம்! அதிர்ச்சி ஆடியோ வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

அரசு வேளாண் கல்லூரி மாணவியை உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு விடுதி வார்டன்கள் பேசும் பேச்சு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்குடியை சேர்ந்த 22 வயதான பெண் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் கல்லூரி உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக புகார் அளித்துள்ளார்.

தங்கபாண்டியன் கல்லூரி விடுதிக்கு வந்து தொந்தரவு செய்ததால் மாணவி, விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதாவிடம் அளித்தார்.

ஆனால் வார்டன்களோ தங்கபாண்டியன் சாரின் ஆசையை நிறைவேற்ற மாணவியை வற்புறுத்தியுள்ளனர்.

அப்படி செய்தால் தங்கபாண்டியன் உன்னை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைப்பதுடன், பெரிய லெவலுக்கு கொண்டு போவார் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

மேலும் ஒரு நாள் தங்கபாண்டியன் சாருடன் அட்ஜஸ்ட் செய்துவிட்டு நடந்தவற்றை மறந்துவிடு என்றும் விடுதி வார்டன்கள் தெரிவித்துள்ளனர்.

நீ என்ன புகார் கொடுத்தாலும் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவோம் எனவும் மாணவியை மிரட்டியுள்ளனர்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் விவகாரமே இன்னும் முடியாத நிலையில் இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers