கண்ணீரில் இருக்கும் கேரள மக்கள்..மனசாட்சியே இல்லாம இப்படி பொய்யான தகவல்களை பரப்பலாமா?

Report Print Santhan in இந்தியா

கேரள மக்கள் வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்க, சில பொய்யான செய்திகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கேரளாவில் கடந்த 11 நாட்களாக பேய்து வந்த கனமழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பின. இதனால் அணைகள் திறக்கப்பட்டதால், வெள்ளம் உருவாகி, அருகிலிருக்கும் மாவட்டங்களுக்குள் நுழைந்ததால், ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகள், வீடுகளை இழந்து கண்னீருடன் தவித்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் தற்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி மக்கள் மீளாத் துயரில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பலரும் போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்த போலியான செய்திகளின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சமூக வலைதளங்களில் வரும் செய்திகளின் உண்மை தன்மையை சோதிக்காமல் பலரும் அதனை உடனடியாக ஷேர் செய்துவிடுகிறார்கள். போலியான செய்திகள் மின்னல் வேகத்தில் பரவி விடுகின்றது.

அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் இப்போது சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. கேரளாவுக்கு நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 77 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அதைப் பற்றி இன்றளவு கிறிஸ்டியன் ரொனால்டோ வாய் திறக்கவில்லை.

ரொனால்டோ இதற்கு முன்பு பல்வேறு விஷயங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார். அதற்காக மனிதாபிமானம் மிக்க வீரர் என்ற விருது கூட அவர் பெற்றுள்ளார்.

கேரளாவில் கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்த செய்தியை அம்மாநில மக்களும் நம்புகின்றனர். ஆனால் இது ஒரு போலியான செய்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers