திருமணம் நிச்சயம் ஆன நிலையில் கேரளா வெள்ளத்தில் மூழ்கிய மணப்பெண்ணின் வீடு: அடுத்து நடந்த ஆச்சரியம்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவின் மலப்புரத்தில் உள்ள நிவாரண முகாமில் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில் அந்த நிவாரண முகாமிலேயே அவருக்கு திருமணம் நடைபெற்றது.

கேரளத்தில் மழை வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளையும் தங்கள் உடைமைகளையும் இழந்துவிட்டனர்.

இதையடுத்து லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மலப்புரத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண்ணின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் நிவாரண முகாமில் தங்கியிருந்தார்.

அவருக்கு ஏற்கெனவே ஷாய்ஜூ என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் திடீர் மழை வெள்ளத்தால் அஞ்சுவின் திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் திரிபுராந்தகா கோயில் அறக்கட்டளை இவரது திருமணத்தை நடத்த முன்வந்தது.

இதையடுத்து அஞ்சு தங்கியிருந்த நிவாரண முகாமிலேயே அவருக்கு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

வெள்ளத்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நடத்த முடியாமல் போய்விடுமோ என்று வேதனையில் இருந்த அஞ்சு குடும்பத்தினர் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்