கேரளாவில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப்பொருட்களை அங்கிருக்கும் தமிழர்களுக்கு கொடுக்காமல் அரசியல்வாதிகள் தங்களுக்கு தேவைப்பட்ட மக்களுக்கு கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா நகரமான மூணார் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து லாரிகளில் வரும் உணவுப் பொருள்களை அரசியல்வாதிகள் கைப்பற்றி தங்களுக்கு வேண்டப்பட்ட மக்களுக்கு அளிப்பதாக இங்கு வசிக்கும் தமிழர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், உண்மையாக உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் சென்று சேர்வதில்லை. எனவே, தமிழத்திலிருந்து நிவாரணப் பொருள்களைக் கொண்டு வருபவர்கள் சரியானவர்களை அடையாளம் கண்டு அவர்களிடத்தில் பொருள்களை ஒப்படைக்கவும் '' என்று இந்தப் பகுதி கவுன்சிலர் கோமதி கோரிக்கை விடுத்துள்ளார்.

நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை. மின்சாரமும் இல்லாததால் தோட்டத் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்