இதுவரை எவரும் தராத நிதியுதவியை கேரளாவுக்கு வாரி வழங்கிய பிரபல தமிழ் நடிகர்: எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடி வழங்கவுள்ளார்.

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு நடிகர்கள், நடிகைகள் நிவாரண உதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடியை பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வழங்கவுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.

வரும் சனிக்கிழமை கேரள முதல்வரை சந்தித்து நிதியை அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்