கேரள மழையின் தீவிரம் குறித்து வெளியான வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரள மாநிலத்தில் நிலவிய மழையின் தீவிரம் குறித்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கோடை காலத்தையொட்டி வரும் பருவக்காற்று அதிகமான மழைப்பொழிவைத் தருவது வழக்கமானதுதான். எனினும், சில சமயம் பருவமழைக்காலங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி மிக பலத்த மழைப்பொழிவைத் தரும்.

இந்த ஆண்டு கேரளாவில் இதனால்தான், மிக பலத்த மழை பெய்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் கேரளா இதுபோன்ற கடுமையான வெள்ளத்தைக் கண்டதில்லை.

இந்த வெள்ளத்தால் சுமார் 364 பேர் உயிரிழந்தனர். சுமார் 3 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதையடுத்து, கேரள வெள்ளத்தை அதிதீவிரப் பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள வீடியோவில் ஆகஸ்ட் 13 முதல் 20 வரையிலான காலகட்டத்தில் 2 பிரிவுகளின் கீழ் மழைப்பொழிவு கணிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவின்படி குறைந்தபட்சம் 12 செ.மீ. முதல் 35 செ.மீ. வரையிலும், இரண்டாவது பிரிவின்படி குறைந்தபட்சம் 25 செ.மீ. முதல் 40 செ.மீ. வரையிலும் மழைப்பொழிவு இருந்துள்ளது. அதிகபட்சமாக 46.9 செ.மீ. மழைப்பொழிவு இருந்துள்ளது.

மழைப்பொழிவு அதிகம் இருந்த பகுதிகள் சிகப்பு நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்று நாசா தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்