தாயாரை கொலை செய்த தஷ்வந்த்துக்கு எதிரான வழக்கில் திடீர் திருப்பம்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னை குன்றத்தூரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமினில் வெளிவந்த இளைஞர் சொந்த தாயாரையும் கொலை செய்த சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

குறித்த வழக்கில் திடீர் திருப்பமாக, தற்போது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்திலிருந்து செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு கொலை வழக்கை மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், ஐடி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர், இவர்மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு, பிறகு ரத்துசெய்யப்பட்டது.

சில மாத சிறைவாசத்துக்குப் பின்னர் வெளியே வந்த தஷ்வந்த், நகைக்காகத் தனது தாயைக் கொன்றுவிட்டு தலைமறைவானார்.

பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 19 ஆம் திகதி சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து செங்கப்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்