கருணாநிதி எழுதிய மன்னிப்பு கடிதம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதி 2008 ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது தன்னை பார்க்க வந்த நண்பன் தென்னன் என்பவரிடம் கோபமாக நடந்துகொண்டுள்ளார்

தென்னன் திருவாரூருக்குக் கிளம்பிப் போய்விட்டார். அதன்பின், கலைஞர், நண்பனின் மனதைப் புண்படுத்திவிட்டோமே என்று மனம் வருந்தி மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதினார்.

அன்புள்ள நண்பர் தென்னனுக்கு,

நீ சென்னையில் வீட்டுக்கு வந்தபோது, அன்று என்னைக்

கப்பியிருந்த சோகத்திலும்-கோபத்திலும்

உன்னை மனம் நோகச் சொன்ன வார்த்தைகளுக்காக வருந்துகிறேன்.

வழக்கம்போல் பொறுத்துக்கொள்க.

என்றும் உன் நண்பன், முக.’ என்று மன்னிப்புக் கேட்பதுபோல் வருத்தம் தெரிவித்து எழுதி, அதில் தன் கைப்படவே தென்னனின் முகவரியையும் எழுதி அனுப்பியுள்ளார்.

நண்பர்களின் மீது அதிக அக்கறை கொண்டவர் கருணாநிதி என்பதற்கு இந்த கடிதம் ஒன்றே சான்று.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்