பெண்களை கட்டிப்பிடித்து மோசமாக நடந்துகொண்ட சாமியார்: வீடியோ காட்சிகள் வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் அசாமில் சாமியார் ஒருவர் பெண்களின் நோய்களை தீர்ப்பதாக கூறி அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமு பிரகாஷ் சவுகான் என்ற சாமியார் தான் விஷ்ணு பக்தன் எனவும், கடவுள் தன் உடலில் இருக்கிறார் எனவும் கூறி பொதுமக்களுக்கு ஆசி வழங்கி வந்துள்ளார்.

அதாவது, தன்னிடம் வருபவர்களை அணைத்தபடியே முத்தம் கொடுத்து தான் ஆசியே வழங்குவாராம்.

அப்படி பிரகாஷ் கட்டியணைது முத்தம் கொடுத்தால் தீராத பிரச்சனைகள் மற்றும் நோய்கள் தீரும் என நம்பவைத்துள்ளார்.

இதனால் இவரிடம் வரும் பெண்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

நாளுக்கு நாள் இது தொடர்ந்து, பெண் பக்தைகளின் எண்ணிக்கை அதிகமான நிலையில் உள்ளூர் டி.வி.சேனல் ஒன்று பிரகாஷின் செய்கைகளை அப்பட்டமாக படம் பிடித்து ஒளிபரப்பியது.

இதை பார்த்து அதிர்ந்த பொலிசார் சாமியார் பிரகாஷிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பயந்து போன சாமியார் நான் விஷ்ணு பக்தர் என்பதெல்லாம் பொய் எனவும் பெண்கள் உட்பட எல்லாரையும் ஏமாற்றி தான் வந்தேன் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் பிரகாஷை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...